கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் உலக சிறுவர் தின விழா சிறப்பாகக் கொண்டாட்டம்! ஆய்வு நூலும் வெளியீடு!

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் “திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தின விழா 2026 மிகவும் சிறப்பாகக் கொண்டாட்டப்பட்டது.
இவ்விழா கடந்த 14/10/2026 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு, கோறளைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் திரு. சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.

நூல் வெளியீடு:
இவ்விழாவின் ஒரு சிறப்பம்சமாக, World Vision Lanka திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று சிறுவர் சபையினால் வெளியிடப்பட்ட “அமைதி தேடும் சிறு உள்ளங்கள் – மன அழுத்தமும் அதன் பாதிப்பும்” (CAY-LED RESEARCH FY26) எனும் தலைப்பிலான ஆய்வு நூல் அதிதிகளினால் அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள்:
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகப் பின்வருவோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்:

திருமதி தயாழினி சசிகுமார் – கணக்காளர்
திருமதி ஜெ. புனிதநாயகி – நிர்வாக உத்தியோகத்தர்
வாழைச்சேனை ,கல்குடா சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள்,
திருமதி தேவமனோகரி சிவபாலசிங்கம் சமூர்த்தி தலைமை முகாமையாளர்
திருமதி கந்தசாமி வினோதினி – சமூர்த்தி முகாமேத்துவ பணிப்பாளர்
திரு. சு. ரமேஸ் – பதவி நிலை உத்தியோகத்தர் மற்றும்
அரச சார்பற்ற நிறுவனங்களாக World Vision , Ceri நிறுவனம் , Brandina, Haniel Child Development பிரதிநிதிகள் , நல்லாயன், விவேகானந்தா, பெத்தேல் சிறுவர் இல்ல முகாமையாளர் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர் சபை தலைவர் , முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பும்:
இச்சிறுவர் தின விழாவில் முன்பள்ளிச் சிறார்களின் அழகான ஆக்கதிறன் நிகழ்வுகள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களைச் சேர்ந்த சிறுவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரதேச சிறுவர் சபைச் சிறார்களின் திறமை வெளிப்பாடுகள் என்பன இடம்பெற்று பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இதனைத் தொடர்ந்து, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் 30 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படது விழாவின் கலை நிகழ்ச்சிகள் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.
இறுதியாக திரு. அஅழகரெட்ணம் அழகுராஜ் – சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரியின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.