காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உளநல மேம்பாட்டுச் செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உளநல மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, உளநல மேம்பாடு தொடர்பான செயலமர்வு நேற்று (13) நடைபெற்றது.

பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில் வளவாளராகக் கலந்து கொண்ட மனூஸ் அபூபக்கர் , உளநல ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், மன அழுத்தத்தைக் கையாளும் முறைகள் மற்றும் பணியிடத்தில் நேர்மறையான மனநிலையைப் பேணுதல் தொடர்பான விடயங்களை விளக்கினார்.

இச்செயலமர்வு உத்தியோகத்தர்களின் உளநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பணியிடச் சவால்களைச் சிறப்பாகக் கையாளும் திறனை வளர்த்து, வினைத்திறனான அலுவலகச் செயற்பாடுகளுக்கும் பொதுமக்களுக்கான சேவை வழங்கலுக்கும் பங்களிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.