ஈழத் தமிழர் வரலாறு நூலுக்கு வட மாகாணத்தின் சிறந்த நூல் விருது!

( வி.ரி. சகாதேவராஜா)

வடக்கு மாகாணத்தின் சிறந்த நூலாக “தேசியக்கவிஞர்”-வன்னியூர் செந்தூரன் எழுதிய “ஈழத்தமிழர் வரலாறு”நூலுக்கு சிறந்தநூல் விருது கிடைத்துள்ளது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடாத்திய போட்டியில் இந் நூல் தெரிவு செய்யப்பட்டது.

அதற்கான “வடக்கு மாகாண பண்பாட்டு விழா -2026 ஆனது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

இந்நிகழ்வில்
வடக்கு மாகாண ஆளுநர் சி. வேதநாயகம் , தேசியக் கவிஞர்-வன்னியூர் செந்தூரனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

பணப்பரிசு, தங்கப்பதக்கம், அங்கீகாரச் சான்றிதழ் போன்றனவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை கடற்றொழில்அமைச்சர் சந்திரசேகரன் உட்பட மாவட்டங்களின் அரச அதிபர்கள், கல்வி அதிகாரிகள், நிர்வாகத்துறை அதிகாரிகள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஈழத் தமிழர் வரலாறு நூல் இலங்கையிலும், சர்வதேசத்தில் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பிரபலமான நூல் என்பதுடன், நூலாசிரியர் வன்னியூர் செந்தூரன் ஏற்கனவே 2013,2019ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் இலங்கையின் “தேசிய விருது” பெற்ற கவிஞர் என்பதும், “உலகத் தொல்காப்பியர் விருது” எனும் சர்வதேச விருதுபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.