( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு மாணவிகள் இருவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
ஒருவர் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் மற்றவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் தங்கப் பதக்கத்தை பெற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
முதலாமவர் செல்வி சகாதேவராஜா டிவானுஜா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் கட்ட MBBS பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றமைக்காக “செல்லத்தங்கம் தம்பிப்பிள்ளை நினைவு தங்கப் பதக்கம் – 2026” விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற 30 வது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுருவிடமிருந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மற்றயவர் செல்வி ரவீந்திரன் முகூர்த்தனா (B.Sc. Electrical and Electronic Engineering பட்டப்படிப்பில் தனது சிறப்பான கல்விச் சாதனைக்காக Overall Performance பிரிவில் தங்கப் பதக்கத்தை, கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் பேராசிரியர் இ. அம்பிகைராஜாவிடமிருந்து அவர் பெயரிலான விருதைப் பெற்றார்.




