மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள் கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீடமைப்பு வேலைத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று (05) இடம்பெற்றது.

கிரான்குளம் , கிரான்குளம் மத்தி , கிரான்குளம் வடக்கு , செல்வாநகர் , செல்வாநகர் ஆகிய கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவுகளில் நேற்று பூரணப்படுத்தப்பட்ட வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் பிரதேச ஒருங்கினைப்புக. குழுவின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் த.சுபாக்கரன் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , வீடமைப்பு அதிகாரசபையின் கணக்காளர் , சமூக வலுவூட்டல் உத்தியோகஸ்த்தர்கள் , கிராம உத்தியோகஸ்த்தர்கள் , பிரஜாசக்தி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.o