இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் கோலாலம்பூரில் மலேசிய வர்த்தக சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், மலேசியத் தமிழ் வர்த்தக சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, தொழில் ரீதியாக வளர்ச்சிகளை மேற்கொள்வது தொடர்பிலும், மலையக இளைஞர்கள் மலேசியாவில் பணிபுரிவதற்கு இலகுவான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மலேசியாவின் பாராளுமன்ற உறுப்பினரும், ம. இ.கா துணை தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.


