எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச சிறுவர் அபிவிருத்தி, உளநல சம்மேளனம் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுக்கும் வலையமைப்பு குழுக்களின் மூன்றாம் காலாண்டுக்கான கூட்டம் – 2026
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச சிறுவர் அபிவிருத்தி, உளநல சம்மேளனம் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுக்கும் வலையமைப்பு குழுக்களின் மூன்றாம் காலாண்டுக்கான கூட்டம் அண்மையில் (25.09.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் தலைமையில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் உதவிப்பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி எஸ். சிவலக்ஷன், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர், மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி, மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கோட்ட ஆசிரிய ஆலோசகர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், உளவளத்துணை ஆசிரியர்கள் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், மகளிர் மகாசங்க உறுப்பினர்கள் அத்தோடு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேசத்தின் சிறுவர்களின் கல்வி, சுகாதாரமும் போசனையும், பாதுகாப்பு பராமரிப்பு, போதைப் பொருள் பாவனையினால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றமை, உளவியல் மற்றும் சமூக தேவைகள், பெண்கள் பாதுகாப்பு பராமரிப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் பல ஆக்கபூர்வமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது.


