மட்டக்களப்பில் வீடற்ற சிறுவர்களுக்கு வீட்டினை கட்டுவதற்கு காசொலை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்ற பிள்ளைகளுக்கு வீட்டினை கட்டுவதற்கான காசொலைகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் நேற்று (30) பழைய மாவட்ட செயலகத்தில் வழங்கி வைத்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ‘திவியட்ட சவியக் ‘ தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக சிறுவர் இல்லங்களில் இருந்து மீள் இணைக்கப்பட்ட மற்றும் நளிவுற்ற குடும்பங்களில் வாழும் பிள்ளைகளுக்கு ஒரு வீட்டினை கட்டிக்கொடுப்பதற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் ஆரம்ப கட்டமாக மண்முனை வடக்கு மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு ஆரம்பக் கட்டமாக ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தமாக 34 சிறுவர்களுக்கு தலா இரண்டு மில்லியன் நிதி இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 திகதிகளுக்கு முன்னர் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள், காத்தான்குடி நிருவாக உத்தியோகத்தர், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரி. மதிராஜ் கலந்து கொண்டனர்.