வி.ரி.சகாதேவராஜா)
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் (National Productivity Awards – NPA 2025/26) போட்டியில், அரசுத் துறையின் (Public Sector) கீழ் கல்முனை ஆதார வைத்தியசாலை (Base Hospital, Kalmunai North) தேசிய மட்டத்தில் 2-ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் (Dr. G. Sukunan) தலைமையில், வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையாலும், உழைப்பாலும் இந்த உயரிய விருது சாத்தியமாகியுள்ளது.
இந்த மகத்தான வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் கருத்து தெரிவிக்கையில்..
”எங்களது ஒட்டுமொத்த குழுவின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறம்படச் செயல்படும் திறன் ஆகியவையே இந்த மதிப்புமிக்க விருதைச் சாத்தியமாக்கியுள்ளன. இந்த சாதனையைக் குறித்து நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். இந்த விருது நமது கூட்டு முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமாகும். இதற்காக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
தேசிய மட்டத்தில் விருது வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


