சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்: குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த சாணக்கியன் MP

சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் அவர்களின் குடும்பத்தினரை, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அனோஜனின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடப்பட்டதுடன், அவரின் விடுதலைக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

அனோஜன் மிக விரைவில் விடுதலை பெற்று குடும்பத்துடன் இணைய தேவையான அனைத்து சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் உரிய தரப்பினருடன் இணைந்து தொடர்ந்து முன்னெடுப்பதாக MP சாணக்கியன் இதன்போது உறுதியளித்தார்.