கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் டிலான்சன் (டிலு) காலமானார்!

( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் அருள்ஞானமூர்த்தி டிலான்சன் (டிலு)( வயது 38) சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு (28) காலமானார்.

கல்முனையின் பிரபல சமூக
செயற்பாட்டாளரான அ.டிலான்சன் (டிலு) இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி இணைச்செயலாளர் சட்டத்தரணி நிதான்சனின் சகோதரராவார்.

ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் அருள்ஞானமூர்த்தி ஓய்வுபெற்ற அதிபர் திருமதி ஜினதா அருள்ஞானமூர்த்தி ஆகியோரின் மூத்த புதல்வர் இவராவார்.
இவர் நற்பிட்டிமுனையில் திருமணம் செய்து ஓர் பெண் பிள்ளையின் தந்தையாகவும் உள்ளார்.

இரங்கல் செய்தி!

கல்முனைப்பிராந்திய பிரபல சமூக செயற்பாட்டாளரும் வைத்தியசாலைக்குழுத் தலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சந்திரசேகரம் ராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்..

கல்முனை பிராந்தியத்திலே தமிழினத்திற்காக குரல் கொடுத்த ஒரு உன்னதமான தலைவன்.தமிழ் மக்கள் கல்முனையிலே ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கினால் அந்த பிரச்சினைகள் சம்பந்தமாக தனது உயிரை கூட மதிப்பிடாமல் அந்தப் பிரச்சனைக்கு தானாகவே வந்து முகம் கொடுத்து எங்கள் இனத்துக்காக எங்கள் சமூகத்திற்காக முன்னெடுக்கின்ற அத்தனை செயற்பாடுகளுக்கும் முன்னிற்பார்.

அன்புத் தம்பி டிலு அவர்கள் திடீர் மரணம் அடைந்த செய்தி கேட்டு மனம் வருந்தினேன். இருந்த போதும் ஆண்டவனின் கட்டளை எப்போது யார் செல்வார் என்பது தெரியாது.
அந்த வகையிலே அவர் இறைவனடி சேர்ந்திருக்கின்றார்.

அவரது ஆத்மா சாந்தியடைய எமது வைத்தியசாலை குழு சார்பாக அவருக்கு என்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்திக் கொள்கின்றேன்.
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
என்றார்.

அவரது ஈமக் கிரியைகள் இன்று(29) செவ்வாய் மாலை 4 மணிக்கு நற்பிட்டிமுனை மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.