சுவிஸ் நடுநிலைமை முன்முயற்சி – கருத்துக்கணிப்பில் 63% எதிர்ப்பு”.

Switzerland-ல் செப்டம்பர் 27, 2026 நடைபெறவுள்ள தேசிய வாக்கெடுப்பில் முக்கிய விடயமாக உள்ள Neutralitätsinitiative – சுவிஸ் நடுநிலைமை முன்முயற்சிக்கு ஆதரவு குறைந்துள்ளதாக இரண்டாவது SRG கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

gfs.bern நடத்திய கருத்துக்கணிப்பின்படி, வாக்களிக்க விரும்புவோரில் 63% பேர் இந்த முன்முயற்சிக்கு எதிராகவும், 34% பேர் ஆதரவாகவும் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். முதல் கருத்துக்கணிப்புடன் ஒப்பிடும்போது எதிர்ப்பு 9 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளதுடன், ஆதரவு 8 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது. மேலும் 83% பேர் தங்களது வாக்கு முடிவு உறுதியானது எனத் தெரிவித்துள்ளனர்.

Neutralitätsinitiative என்ன கேட்கிறது?

இந்த முன்முயற்சி Switzerland-ன் நடுநிலைக் கொள்கையை அரசியலமைப்பில் மேலும் கடுமையாக வரையறுக்க விரும்புகிறது. Switzerland எந்த இராணுவ அல்லது பாதுகாப்புக் கூட்டணியிலும் இணையக்கூடாது; சில விதிவிலக்குகளைத் தவிர அத்தகைய கூட்டணிகளுடன் ஒத்துழைக்கக்கூடாது. போரில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிரான தடைகளையும் பொதுவாக மேற்கொள்ளக்கூடாது; ஐ.நா. தடைகள் உள்ளிட்ட சில விதிவிலக்குகள் மட்டும் இருக்கும்.

முன்முயற்சிக் குழுவின் கருத்துப்படி, இத்தகைய விதிகள் Switzerland-ன் நிரந்தரமான, ஆயுதமுடைய நடுநிலைத்தன்மையை தெளிவாகப் பாதுகாக்கும். மறுபுறம், Federal Council மற்றும் Parliament இதற்கு எதிராக உள்ளன; தற்போதைய நடைமுறை மாறும் சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்பட Switzerland-க்கு தேவையான சுதந்திரத்தை வழங்குகிறது என்பது அவர்களின் நிலைப்பாடு.

SVP ஆதரவாளர்களிடையே இந்த முன்முயற்சிக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு காணப்பட்டாலும், அந்தக் குழுவிலும் ஆதரவு குறைந்துள்ளதாக gfs.bern தெரிவிக்கிறது.

⚠️ முக்கியம்: இது வாக்கெடுப்பு முடிவு அல்ல. கருத்துக்கணிப்பு மட்டுமே. இறுதி முடிவை செப்டம்பர் 27 அன்று வாக்காளர்களே தீர்மானிப்பார்கள்.

தகவல் மூலம்: gfs.bern / SRG / Swiss Confederation / Keystone-SDA