நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும்!

அடுத்த பத்து நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் எல் நினோ நிலைமை எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி மாதம் வரை நிச்சயமாகத் தொடரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலைக்கு முற்றிலும் மாறாக, எதிர்வரும் இரண்டு மாதங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அதற்குத் தேவையான முன்ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பிராந்தியத்தில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண அளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.