Bern-இல் பொலிஸ்–இராணுவம் இணைந்து 4 நாள் பாதுகாப்புப் பயிற்சி
12.09.2026 | Bern
சுவிட்சர்லாந்தின் முக்கிய உட்கட்டமைப்புகளை அவசரகால சூழ்நிலைகளில் பாதுகாப்பதற்காக, Bern மாநிலப் பொலிஸும் Swiss Army-யும் இணைந்து “FIDES 26” என்ற நான்கு நாள் பாதுகாப்புப் பயிற்சியை நடத்துகின்றன.
செப்டம்பர் 12 முதல் 15 வரை நடைபெறும் இந்தப் பயிற்சி Bern, Bolligen, Köniz, Spiez மற்றும் Interlaken-Oberhasli பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.
Bantiger-இல் ட்ரோன் எதிர்ப்பு பயிற்சி
Bern அருகிலுள்ள Bantiger ஒலிபரப்புக் கோபுரம் முக்கிய பயிற்சித் தளங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்று நுழைந்தால், அதை கண்டறிந்து எவ்வாறு எதிர்கொள்வது என்பதை Bern மாநிலப் பொலிஸின் நிபுணர்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக செயல்விளக்கம் செய்கின்றனர்.
மின்சார விநியோகம், தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் பொதுவாழ்க்கையின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான பிற அத்தியாவசிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்களை பாதுகாப்பதே பயிற்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் அமைப்புகள் ஒரு பெரிய நெருக்கடி அல்லது அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலையில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதும் நடைமுறையில் சோதிக்கப்படுகிறது.
Switzerland-இல் இராணுவ மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளுக்கு மேலாக ட்ரோன் பறப்புகள் அதிகரித்து வருவதாக சுவிஸ் பாதுகாப்புத் துறையும் அண்மையில் தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில் ட்ரோன்கள், ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் Robotics ஆகியவற்றை சுவிஸ் பாதுகாப்புத் திறனின் முக்கிய பகுதிகளாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது.
Bantiger மற்றும் Ulmizberg பார்வை/ஒலிபரப்புக் கோபுரங்கள் பயிற்சி நடைபெறும் நான்கு நாட்களிலும் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
Bern மாநிலத்தின் பல பகுதிகளில் பொலிஸ் மற்றும் இராணுவ வாகனங்கள், பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்படலாம்.
மின்சார விநியோக அமைப்புகள், தொலைத்தொடர்பு வசதிகள் உள்ளிட்ட நாட்டின் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்”


