Solothurn-ல் புதிய Polit-Café – அரசியலும் மக்களும் நேரடியாக சந்திக்கும் மேடை”

அரசியல் மக்களைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல – மக்களுடன் பேச வேண்டும்!

Solothurn மாநிலத்தில் புதிய “Polit-Café” – அரசியல்வாதிகளும் பொதுமக்களும் நேரடியாக உரையாட புதிய தளம்

அரசியல் தொடர்பான கேள்விகளை நேரடியாக முன்வைக்கவும், பல்வேறு கருத்துக்களைக் கேட்கவும், அரசியல் விடயங்களை மக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் கலந்துரையாடவும் “Polit-Café Solothurn” என்ற புதிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SP Migrant Kanton Solothurn ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்வு, அரசியலுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேரடியான உரையாடலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம்.

இங்கு அரசியல் விடயங்கள் குறித்து விவாதிக்கவும், கேள்விகளை எழுப்பவும், வெவ்வேறு பார்வைகளைக் கேட்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

“அரசியல் மக்களைப் பற்றிப் பேசுவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது; மக்களுடன் பேச வேண்டும்.”

நிகழ்வு விபரம்

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2026
19:00 – 21:00 மணி
Schalander Drei Tannen Bier, Olten
ஏற்பாடு: SP Migrant Kanton Solothurn