– யூ.கே. காலித்தீன் –
அன்மையில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் தோற்றி சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டி கௌரவிக்கும் விழா சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலத்தின் முதல்வர் எம்.ஏ. அஸ்தர் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களின் முறையான திட்டமிடல், சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி ஏ.அஸ்மா மலிக் அவர்களின் ஆலோசனையிலும் மற்றும் கல்லூரியின் முதல்வர் எம்.ஏ. அஸ்தர் அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி ஏ. அஸ்மா மலிக் கலந்து கொண்டார்.
இப்பாடசாலையானது கரையோரப் பகுதியில் இருந்தாலும் மாணவர்களின் ஒழுக்கம், புறக்கீர்த்தி, ஆக்கம், வினைத்திறன் மிக்க மாணவர்களைக் கொண்ட கோட்ட மட்டத்தில் முன்னனி வகிக்கின்ற பாடசாலையாக சாய்ந்தமருது கோட்டத்தில் மிளிர்கின்ற பீட்சா றியாழுல் ஜன்னா வித்தியாலம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
2026 ஆண்டில் புலமை பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களில் கோட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்ற ஏ.அப்துல்லா சறாப் 165 புள்ளிகளை பெற்றமையும் விஷேட அம்சமாகும். முறையே எப். ஆயிஷா இத்றிபா 145, ஏ.முஹம்மட் சாலிஹ் 133 புள்ளிகளை பெற்ற மூன்று மாணவர்களையும் பாராட்டப்பட்டதோடு இப்பாடசாலையில் பரீட்சைக்கு 23 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி 22 மாணவர்கள் வெற்றிப்புள்ளிகளை பெற்று கோட்ட மட்டத்தில் 95.7வீதத்தினை பெற்று சாய்ந்தமருது கோட்டத்தில் இப்பாடசாலை 2ம் இடத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்
மாணவர்களின் வெற்றியில் வழிகாட்டி ஊக்குவித்த ஆசிரியர்களை கௌரவித்ததோடு மாணவர்களுக்கும் கல்வி கற்பித்த வகுப்பு ஆசிரியை எஸ்.ஆர்.எம். றிசான றிசாட், தரம் 1ம்,2ம் வகுப்பு கற்பித்த ஆசிரியை எஸ்.எம். ஸபினா நஜீம், பிரத்தியோக ஆசிரியர்களான ஏ.நஸீருதீன், என்.எம்.சாக்கீர் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர் ஏ.எம். பஸ்மியா நளிம் ஆகியோர்களுக்கும் அதிதிகளினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய ஆரம்ப நெறி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்ஸார், பாடசாலை நிறைவேற்று அபிவிருத்தி செயலாளர் எம்.ஐ.காலித், பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.கே. காலித்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு பாடசாலை பகுதி தலைவர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


