(கஜனா )
கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ வரதராஜனின் கடலலைகள் மூடி வைத்த காலடிகள் கவிதை நூல் எதிர்வரும் செப்டம்பர் 12ம் திகதி சனி,மாலை 3.00 மணிக்கு கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் வெளியீடு இடம் பெறவுள்ளது.
குறித்த நூல் வெளியீடு எழுத்தாளர். உமா வரதராஜன் தலைமையில் வெளியிடப்படவுள்ளதுடன் நூல் பற்றிய அறிமுகவுரையை தென் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளரரும் இலக்கியவியலாளருமான சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்தவுள்ளார்.
நிகழ்வில் முதன்மை விருந் தினர்களாக ஏறாவூர்ப்பற்று செங் கலடி பிரதேச செயலாளர் கோ. தன பாலசுந்தரம், கல்முனை வலயக் விப் பணிப்பாளர் எம். எஸ். நஜீம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் க.கல்லிங்கேஸ்வரன், கல்முனை வடக்கு ஸஹதுல் ஆதார வைத்தியசாலையின் வைத் திய அதிகாரி, டாக்டர் நடராசா ரமேஷ், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் செல்லத்தம்பி கலையரசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
விழாவில் நூல் பற்றிய மதிப்புரைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் றமீஸ் அப்துல்லா, கிழக்குப் பல் கலைக்கழக பேராசிரியர் சி. ஜெயசங்கர், சிரேஷ்ட கவிஞர் சோலைக்கிளி, டாக்டர். புஷ்பலதா லோகநாதன் (மலரா), கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வு நிலை பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
கிழக்கின் இலக்கியச் சூழலில் சிறந்த விமர்சக எழுத்தாளராகவும் கவிஞராகவும் தன்னை வெளிப்படுத்திய சிவ வரதராஜனின் முதல் படைப்பாக இந்த நூல் அமைந்துள்ளது.


