சுவிஸில் Lidl வாடிக்கையாளர்களுக்கு அவசர உணவு எச்சரிக்கை – மீன் தயாரிப்பு திரும்பப் பெறப்படுகிறது

Lidl Schweiz கடைகளில் விற்பனை செய்யப்பட்ட DANFOREL A/S நிறுவனத்தின் “Forellenfilets geräuchert – Nature” (புகையூட்டப்பட்ட Trout மீன் துண்டுகள்) தயாரிப்பில் Listeria பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் 13.09.2026 Mindesthaltbarkeitsdatum கொண்ட குறிப்பிட்ட தயாரிப்பை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தயாரிப்பை எந்த Lidl Schweiz கிளையிலும் திருப்பிக் கொடுத்து பணத்தை மீளப் பெறலாம். ரசீது இல்லாவிட்டாலும் பணம் திருப்பி வழங்கப்படும்.

இந்த recall குறிப்பிட்ட “Forellenfilets geräuchert – Nature – 13.09.2026” தயாரிப்புக்கு மட்டுமே பொருந்தும்; Lidl-ல் விற்கப்படும் மற்ற தயாரிப்புகள் இதில் பாதிக்கப்படவில்லை.