சுவிஸ் மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம் (BLV), Carnadis Sàrl நிறுவனத்தால் பொதி செய்யப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட பல உணவுப் பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிறுவனத்தின் உற்பத்திச் சூழலில் Listeria monocytogenes பாக்டீரியா கண்டறியப்பட்டதால், அங்கு கையாளப்பட்ட உணவுப் பொருட்களும் மாசடைந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் புதிய இறைச்சி, vacuum-packed இறைச்சி, Tartar, Burger, இறைச்சிக் குச்சிகள், marinated meat, sausages, charcuterie மற்றும் poultry பொருட்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
குறிப்பாக 2026 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 2 வரை சந்தைக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இவை Locindus SA, Avenue de Sévelin 13, Lausanne விற்பனை நிலையத்துடன் தொடர்புடையவை.
BLV அறிவுறுத்தல்
குறிப்பிட்ட பொருட்களை சாப்பிட வேண்டாம் என நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Listeria தொற்று பொதுவாக ஆரோக்கியமானவர்களுக்கு லேசாக இருக்கலாம். ஆனால் கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு உள்ளிட்ட தீவிர விளைவுகளும் ஏற்படலாம்.


