எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் சங்கீத் மோனிஸ் ராதயன், தனது திறமையினாலும் விடாமுயற்சியினாலும் சிறந்த முறையில் சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
சிறுவயதிலிருந்தே சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவர், கல்வி மட்டுமன்றி விளையாட்டிலும் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
தனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த மாணவன் சங்கீத் மோனிஸ் ராதயன்:
“எனது விடாமுயற்சியே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். ஆசிரியர்களின் சரியான வழிகாட்டலும், பெற்றோர்களின் தொடர்ச்சியான ஊக்கமுமே என்னை இந்த இலக்கை அடைய வைத்தன.
எனக்கு ஆரம்பம் முதல் கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள், பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள், எனது உயிரான பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் கூறினார்.
விடாமுயற்சியுடன் செயற்பட்டு பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவன் சங்கீத் மோனிஸ் ராதயனுக்குப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


