எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் “சுகாதார அறிவியலில் வளர்ந்து வரும் போக்குகள்” குறித்த 4வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு (ICETHS 2026) இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் ரீ.வரகுணம் அரங்கத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் பேராசிரியர் பீ. பிரதீபன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
குறித்த சர்வதேச ஆராய்ச்சி மாநாடுட்டின் பிரதான பேச்சாளர்களாக பேராதனை பல்கலைக்கழகத்தின்
பேராசிரியர் சமன் நாநயகார மற்றும் Univesity of Auckland – New zealand இன்
பேராசிரியர் மார்க்கஸ் ஹெனிங்க் உள்ளிட்ட இருவரும் பங்கேற்று சிறப்புரையாற்றியிருந்தனர்.
இதன் போது பிரதான பேச்சாளர்கள்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி ஆகியோரினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதம அதிதிகள் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் வரவேற்பளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டதனைத் தொடர்ந்து இம் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களினால் 72 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள.
குறித்த நிகழ்வில் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பணிப்பாளர்கள், பல்கலைக்கழகத்தின் போராசிரியர்கள், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இளம் ஆய்வாளர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.


