எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (02) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வளவாளராக திருமதி ஹானு கிருஷ்ணா கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு முன்பிள்ளைப் பருவக் கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து விளக்கமளித்தார்.
“செனெஹே ஊடாக” வீடுகளை அடிப்படையாகக் கொண்டு முன்பிள்ளைப் பருவ மாணவர்களின் பெற்றோர்களுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, முன்பிள்ளைப் பருவ குழந்தைகளின் கல்வி, உடல் மற்றும் உளவியல் வளர்ச்சி, பெற்றோர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ உத்தியோகத்தர் எம்.எம். சர்ஜுன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அரிஸியா, அபிவிருத்தி உத்தியோகத்தர் நிஹாரா உட்பட
சுமார் 65 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


