பணக்கார சுவிட்சர்லாந்திலும் கடன் சுமை

 – மக்களுக்கு புதிய “இரண்டாவது வாய்ப்பு”

உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்திலும் குடும்பங்களின் கடன் மற்றும் செலுத்தப்படாத பில்கள் முக்கிய பிரச்சினையாக உள்ளன. Federal Statistical Office (BFS) தரவின்படி, 2022-ல் 12.1% மக்கள் குறைந்தது ஒரு நிலுவைப் பணம் உள்ள குடும்பத்தில் வாழ்ந்தனர். வரி மற்றும் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியம் நிலுவைகள் இதில் முக்கியமானவை.

இதனால் நீண்டகாலமாக கடனிலிருந்து வெளியே வர முடியாத தனிநபர்களுக்கு புதிய வாய்ப்பை வழங்கும் வகையில் சுவிஸ் அரசு கடன் மறுசீரமைப்பு சட்ட மாற்றத்தை முன்னெடுத்துள்ளது. வழக்கமான வருமானம் உள்ளவர்கள் கடனாளர்களுடன் உடன்பாடு செய்து கடனின் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்யும் நடைமுறையும், உடன்பாடு சாத்தியமில்லாதவர்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மீதிக் கடனிலிருந்து விடுபடும் மறுசீரமைப்பு நடைமுறையும் இதில் அடங்கும்.

இரண்டாவது நடைமுறையில், கடனாளி மூன்று ஆண்டுகள் கிடைக்கக்கூடிய நிதியை கடன் வழங்கியவர்களுக்கு செலுத்துவதுடன், நிலையான வருமானம் ஈட்ட முயற்சி செய்ததையும் நிரூபிக்க வேண்டும். கடமைகளை முறையாக நிறைவேற்றினால் மீதமுள்ள கடனிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

⚠️ மிக முக்கியமான திருத்தம்