சுவிட்சர்லாந்தில் குழந்தை மருத்துவர்கள் பற்றாக்குறை

சில மாகாணங்களில் ஒரு முழுநேர குழந்தை மருத்துவருக்கு 4,000-க்கும் அதிகமான குழந்தைகள்

சுவிட்சர்லாந்து | 02.09.2026

சுவிட்சர்லாந்தில் குழந்தை மருத்துவர்களின் பற்றாக்குறை எல்லா பகுதிகளிலும் ஒரே அளவில் இல்லை. University of Bern மற்றும் pädiatrie schweiz இணைந்து மேற்கொண்ட புதிய ஆய்வு, மாகாணங்களுக்கு இடையே மிகப்பெரிய வேறுபாடு இருப்பதைக் காட்டுகிறது.

நாடு முழுவதும் சராசரியாக ஒரு முழுநேர குழந்தை மருத்துவருக்கு சுமார் 1,600 குழந்தைகள் உள்ளனர். ஆனால் சில மாகாணங்களில் நிலை மிகவும் கடினமாக உள்ளது.

மாகாணம் ஒரு முழுநேர குழந்தை மருத்துவருக்கு சுமார்
Appenzell Ausserrhoden 4,750 குழந்தைகள்
Obwalden 4,150
Schaffhausen 3,550
Thurgau 3,100
Genève 750
Basel-Stadt 1,100
Vaud 1,100
Ticino 1,100

அதாவது, Genève-ஐ ஒப்பிடும்போது Appenzell Ausserrhoden-இல் ஒரு முழுநேர குழந்தை மருத்துவர் ஆறு மடங்குக்கும் அதிகமான குழந்தைகளுக்கான மருத்துவ தேவையை எதிர்கொள்கிறார்.

ஆய்வின்படி, குழந்தை மருத்துவர்களில் 87% பேர் பகுதி நேரமாகப் பணிபுரிகின்றனர். நிர்வாகப் பணிச்சுமை, மருத்துவ நிலையம் நடத்துவதிலுள்ள நிதி அபாயம், பெற்றோரின் அதிகரித்த எதிர்பார்ப்புகள் போன்றவையும் பிரச்சினையை தீவிரப்படுத்துகின்றன. கிராமப்புறங்களில் பற்றாக்குறை அதிகமாக உணரப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.

இதன் விளைவாக சில குடும்பங்கள் நீண்ட தூரம் பயணிக்கவும், appointment-க்காக அதிக நேரம் காத்திருக்கவும், சில சமயங்களில் குழந்தைகள் மருத்துவமனைகளின் அவசரப் பிரிவுகளுக்குச் செல்லவும் வேண்டியிருக்கிறது.