கிரிக்கெட் வீரர் ஆசிப் கானுக்கு 15 மாதத் தடை

ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வீரர் ஆசிப் கானுக்கு (Asif Khan) 15 மாதங்கள் கிரிக்கெட் நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2025 செப்டம்பர் 8ஆம் திகதி போட்டிகளுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில், தடைசெய்யப்பட்ட Mesterolone என்ற பொருளின் metabolite அவரது மாதிரியில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ICC Anti-Doping Code-இன் Article 2.1 விதியை மீறியதை ஆசிப் கான் ஏற்றுக்கொண்டுள்ளார். உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் WADA மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட Case Resolution Agreement அடிப்படையில் 15 மாதத் தடையையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தடை எப்போது முடிவடைகிறது?

இந்தத் தடை 2025 செப்டம்பர் 8 முதல் 2026 டிசம்பர் 7 வரை அமலில் இருக்கும். 2026 அக்டோபர் 8 முதல் அணியுடன் பயிற்சியில் ஈடுபடவும், ICC உறுப்பினர் அமைப்புகளின் பயிற்சி வசதிகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவார். ஆனால் 2026 டிசம்பர் 8 முதல் மட்டுமே போட்டிகளில் மீண்டும் விளையாட முடியும்.

மேலும், 2025 செப்டம்பர் 8 முதல் அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட 2025 டிசம்பர் 29 வரையிலான தனிப்பட்ட போட்டி முடிவுகள் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தக் காலப்பகுதியில் கிடைத்த பதக்கங்கள், புள்ளிகள், பரிசுத் தொகைகள் மற்றும் பரிசுகள் உள்ளிட்டவையும் இழக்கப்படும்.

Case Resolution Agreement-இன் கீழ் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.