எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் பொதுச்சபைக் கூட்டமும் நிருவாகத் தெரிவும் அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான நிஹாறா மௌஜூத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (22) இடம்பெற்றது.
பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி எம் .ஐ.எம் ஜவாஹிரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்
பிரதேச கலாச்சார அதிகார சபையின் கடந்த கால செயற்பாடுகள் அதன் நடவடிக்கைகள் கலைஞர்களினால் வெளிக்கொணரப்பட்ட திறமைகள் தொடர்பாக அதிகார சபையின் தலைவர் நிஹாறா மௌஜூத் தலைமை உரையாற்றினார்.
எமது பிரதேச கலைஞர்களின் அர்ப்பணிப்பான பணிகள் மற்றும் பிரதேச செயலாளர் கலாச்சார அதிகார சபைக்கு ஆற்றிவரும் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகள் தொடர்பாக செயலாளர் இல்மி அகமட் லெவ்வை தனதுரையில் உரையாற்றினார்.
இதன்போது புதிய நிருவாக சபை தெரிவும் இடம்பெற்றது.


