யாழில் PickMe நடத்துவது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரனா?

கடந்த காலத்தில் மிகவும் பேசும் பொருளாக இருந்த பிக்மி முச்சக்கர வண்டி சங்கங்களால் அதிகம் பேசப்பட்டது அப்போது இது யாழ்ப்பாணத்தில் முன்னால் கடல்தொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடத்துவதாகவும் கூறப்பட்டது ஆனால் இறுதியில் வந்த தகவலின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் ஒரு முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான திரு MA சுமந்திரன் அவர்கள் மறைமுகமாக நடத்துவது தெளிவாக தெரியவந்தது.

காரனம் இப்போது யாழில் முன்பு முகவராக செயல்பட்ட நபர் வேறு ஒரு செயலியுடன் இணைந்த நிலையில் அவர் வழமையாக பொலீசாருக்கு வழங்கும் கூடாரத்தில் ஒன்று யாழில் நல்லூர் முன் வீதியில் இருந்து அகற்றி அந்த இடத்தில் PickMe கூடாரம் அமைக்கப்பட்டது, அத்துடன் பல லட்சம் கோரல் மூலம் இடங்களை யாழ்ப்பாண மாநகரசபைக்கு பணம் செலுத்தி எடுக்கும் வர்த்தர்கர்களுக்கு மத்தியில் PickMe நிறுவனத்துக்கு அந்த இடத்தை இலவசமாக யாழ்ப்பாண மாநகரசபை முதலவர் மதிவதனி வழங்கியுள்ளார்,

போக்குவரத்து பொலிஸ்க்கு வழங்கினால் இந்த நிறுவனம் எப்படி அந்த இடத்தில் வைத்து தமது விளம்பரப்படுத்தலை நடத்த விட்டது, எனயவர்களுக்கு பண செலுத்த வேண்டும் தமது கட்சி சார்பாக உள்ளவர்கள் அப்படி செலுத்த தேவை இல்லை என்று ஒரு சட்டம். இதுக்குதான் ஆட்சிக்கு வந்ததா TNA? அது மட்டும் இல்லாமல் இப்போது PickMe நிறுவனத்தைபற்றி மக்கள் அதிகம் அதிருப்தியில் உள்ள நிலையில் இவ்வாறான செயல்பாடுகள் விரக்தியை உண்டாக்கும்.

அப்படியானால் கோரல் மூலம் மற்ற இடங்களுக்கு பெறப்பட்ட பணத்தை மீள செலுத்துமா யாழ்ப்பாண மாநகரசபை?

ஆதாரம் அனைத்தும் இணைப்பில்

1: MA சுமந்திரன் இப்போது PickMe நிறுவனத்தின் இணைப்பில் உள்ளதால் யாழில் உள்ள முகாமையாளர்கள் திரு ஆரூரன் மற்றும் திரு ஜெசிந்தன் ஆகியோர் தமது செல்வாக்கை பயன்படுத்துகிறார்கள் அத்துடன் வவுனியாவில் இடம்பெறும் கூடிய பிரச்சனைக்கும் இவர்கள் காரணம் ஏன் என்றால் இங்கு இருந்து வவுனியாவில் துண்டுப்பிரசுரம் ஆள் வைத்து வழங்குதல் மற்றும் அவர்களுடன் முரண்படவைதல் நடக்கிறது

2: குறிப்பிட்ட யாழ்ப்பாண மாநகரசைக்கு PickMe நிறுவனம் 20 No Parking பலகைகளை இலவசமாக வழங்கிய நிலையில் அதில் ஒரு புறம் No Parking என்றும் மறு புறம் PickMe என்றும் இருந்தால் அது விளம்பர பலகை என்பது அர்த்தம் இவ்வாறான இடத்தில் நிறுவனத்திடம் பணம் பெறாதது ஏன்?

3. சிவப்பு நிறத்தில் வட்டம் போட்ட இடத்தில் அந்த பலகையின் பின்புறம் உள்ளது. யாழ்ப்பாண மாநகரசபை இந்த செயல்பாட்டில் யாழ் மாநகரசபை ஆணையாளர் இல்லை காரணம் அவர் இன்றைய காலத்தில் இவர்களுக்கு எதிரானவர்.

4: இணைக்கப்பட்ட முதலாவது வீடியோவில் அந்த கூடாரத்தில் வைத்து தண்ணீர் வழங்கல் மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது