எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய லொத்தர் சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் லொத்தர் சீட்டுகளை வீதியோரங்களில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு காப்புறுதித் திட்டம் இன்று (19) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தேசிய லொத்தர் சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ். சிவகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியம் கலந்துகொண்டார்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட லொத்தர் விற்பனையாளர்களுக்கான காப்புறுதித் திட்ட உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட விற்பனை முகவர்கள், லொத்தர் விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தேசிய ரீதியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஐந்தாவது நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, லொத்தர் விற்பனையாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, திடீர் அனர்த்தங்களினால் ஏற்படும் மரணத்திற்கான காப்புறுதி மற்றும் பாரிய நோய்களுக்கான காப்புறுதித் திட்டங்கள் உள்ளிட்ட மேலும் பல நலத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


