மட்டக்களப்பில் காணாமற்போனோர் தொடர்பான சாட்சியங்கள் பதிவு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு காணாமற் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தில் காணாமற்போன ஆட்கள் தொடர்பான சாட்சி விசாரணைகள் இன்று (18) இடம்பெற்றது.

காணாமற்போன தமது உறவினர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக 100 பேர் இன்றைய சாட்சி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமற்போனோர் தொடர்பான விவரங்கள், சம்பவங்கள் மற்றும் தமக்குத் தெரிந்த தகவல்களை சாட்சியங்களாக பதிவு செய்வதற்காக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய விசாரணைகளில் காணாமற்போனோரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு தங்களது சாட்சியங்களை வழங்கி வருகின்றனர்.