இன்று மடத்தடியில் சிறப்பாக நடைபெற்ற நாக சதுர்த்திப் பெருவிழா !

( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த நாக சதுர்த்தி பெருவிழா இன்று (16) ஞாயிற்றுக்கிழமை ஆலய தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலையில் நாக மகா யாகம், ஆலயத்தை சுற்றவர உள்ள ராஜநாக புற்று உள்ளிட்ட ஏழு
புற்றுகளுக்கும் பால் ஊற்றி பழம் பூக்கள் என்பன அடியார்களால் வைக்கப்பட்டது.

நாக தோசம் உள்ளவர்கள் தர்ப்பை கட்டி வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.

ஆலய பரிவார மூர்த்திகளில் ஒன்றான நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்பு பூஜை, ஆலய உதவிக்குரு சிவஸ்ரீ ஜீவன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆலய நிர்வாக சபையினர் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.