எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பாசிக்குடாவை மையமாகக் கொண்டு சுற்றுலா துறையை உலக வங்கியின் அனுசரனையுடன் அபிவிருத்தி செய்வது தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த், இச்செயற்றிட்டம் தொடர்பான சாத்திய வளக்கூற்றறிக்கை தொடர்பாக ஆராய்வினை மேற்கொள்ளும் கிறன்ட் ரொரன்ட் வாறத் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மெஹாலி பட்டேல் மற்றும் ஆக்கிடெக் நிபுணர் ஜெயடுட் வைஸ்நவ் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள், சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதை நோக்காக்க கொண்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தீர்க்கும் வண்ணமான செயற்றிட்டங்களை உலகலாவிய ரீதியில் மேம்படுத்தும் நோக்கில்
சிறந்த திட்ட முன்மொழிவினை முன்வைத்த குறித்த இந்திய நிறுவனமானது மீனவர்களுக்கும் உள்ளூர் சுற்றுலா துறைக்கும் பங்கம் ஏற்படாவண்ணமும்
வீதி புனரமைப்புக்கள் மேம்பாடு, சுற்றாடல், நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை, உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்படும் வண்ணமான செயற்றிட்ட முன்மொழிவுகள் இதன் போது அழிக்கை செய்யப்பட்டதுடன், திணைக்களம் சார் அதிகாரிகளின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டதுடன், மீனவர்களுக்கென தனியானதொரு அலகை கல்குடாவில் உருவாக்கி கொடுப்பது தொடர்பாகவும் இதன் போது திட்டங்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


