(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச சபையின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசங்களில் மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினூடாக நானாட்டான் பிரதேச சபையினால் நாய்களுக்கான இலவச கருத்தடை செயற்திட்டமானது 2026.08.25 திகதி தொடாக்கம் 2026.09.04 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இச்செயற்திட்டமானது மடுக்கரையில் ஆர்டிஎஸ் கட்டிட வளாகத்தில் 25.08.2026 அன்றும்
இசைமாலைத்தாழ்வு ஆர்டிஎஸ் கட்டிட வளாகத்தில் 28.08.2026 அன்றும்
செம்மண்தீவு ஆர்டிஎஸ் கட்டிட வளாகத்தில் 01.09.2026 அன்றும்
நானாட்டான் பிரதேச சபை கலாச்சார மண்டப வளாகத்தில் 03.09.2026 அன்றும்
வங்காலை பிரதேச சபை பழைய உப அலுவலக கட்டிட வளாகதத்pலும் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை நடைபெறும் என நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் அ.அன்றுராஜன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கத்தினால் ஏற்படும் வீதி விபத்துக்கள் நாய்கடியினால் உருவாகும் நீர் வெறுப்பு நோயினால் ஏற்படும் பரிதாபகரமான மரணங்கள் மற்றும் பல்வேறு அளெகரியங்களை கருத்திற்கொண்டு பொது மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு கருத்தடைகளை மேற்கொள்வதுடன்
உரிய சிகிச்சைகளைப்பெற்று பொது மக்களின் பாதுகாப்பினையும் ஆரோக்கிய வாழ்வினையும் உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் அ.அன்றுராஜன் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமூக ஆர்வலர்கள் வீதியோரங்களில் நடமாடும் கட்டாக்காலி நாய்களுக்கான கருத்தடையை மேற்கொள்ள நானாட்டான் பிரதேச சபைக்கு உதவி செய்யுமாறும் கோரிக்கையும் விடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

