வலே மாநிலத்தின் Randa அருகே உள்ள Schalihorn மலையில் இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
Oberwallis பகுதியில் 3,975 மீட்டர் உயரமுள்ள Schalihorn மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இருவரிடமிருந்து புதன்கிழமை முதல் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் கவலையடைந்த உறவினர்கள், மறுநாள் Wallis மாநில மீட்பு அமைப்பான KWRO-க்கு தகவல் வழங்கினர்.
இதையடுத்து Air Zermatt ஹெலிகாப்டர் உதவியுடன் மலைப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேடுதலின்போது காணாமல் போன இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உத்தியோகபூர்வ அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மலை விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் Wallis அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
ஆதாரம்: Keystone-SDA / Walliser Kantonspolizei


