( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை சமுத்திரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.
கொடியேற்றத்திருவிழா கடந்த மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்று நேற்று தீர்த்தம் நடைபெற்றது .
மேலும் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன் செலுத்தும் முக்கியமான கிரியையும் நடைபெற்றிருந்தது.
ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் நாளை 13 ஆம் திகதி பூங்காவனத்திருவிழா வள்ளி திருமணமும் நடைபெற்று தொடர்ந்து மறுநாள் 14 ஆம் திகதி வயிரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளது.


