கொழும்பு – பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையின் போது 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக, போதைப்பொருள் தொகுதியுடன் 32 வயதான ஒருவர் தெஹவளை பகுதியை சேர்ந்த ஒருவர், கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரிடம்; நடத்தப்பட்ட விசாரணையின் போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் ‘வாட்ஸ்அப்’ அழைப்பு மூலம் வழங்கிய தகவலின் அடிப்படையில், தான் இந்த போதைப்பொருளை சேகரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அந்த போதைப்பொரளை – வனத்த வீதியில் உள்ள பிறிதொரு நபரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் நடவடிக்கையின் போதே, போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள வந்ததாக கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


