விவசாயத் திணைக்களத்தில் புதிய 329 பேரை ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரல்

(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III பதவிகளுக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 329 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.

விவசாய திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களாவன:
விவசாய போதனாசிரியர் (Agriculture Instructor) – 257
,ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) – 70
,மண் ஆய்வாளர் (Soil Surveyor) – 02

இதன் சம்பள அளவுத்திட்டம் ரூ.52,250 முதல் ரூ.100,040 வரை அமைந்துள்ளது.

விண்ணப்பிக்க தகைமைகளாக
பதவிக்கு ஏற்ப G.C.E. O/L, G.C.E. A/L, விவசாய டிப்ளோமா அல்லது தொடர்புடைய NVQ Level 6 தகுதி பெற்றவர்களாவர்.

வயது
2026.09.04 அன்று 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் காலம் 10.08.2026 காலை 9.00 மணி முதல் 04.09.2026 இரவு 9.00 மணி வரை

பரீட்சைக் கட்டணம்: ரூ.1,200 ஆகும். விண்ணப்பங்களை Online முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

பரீட்சையில்:
▪️ நுண்ணறிவுப் பரீட்சை – 100 மதிப்பெண்கள்
▪️ பாட அறிவுப் பரீட்சை – 100 மதிப்பெண்கள்

பரீட்சை 2026 நவம்பர் மாதத்தில் கொழும்பு மற்றும் கண்டியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.