(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் விவசாயிகள் மத்தியில் தேனீ வளர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வுச்
செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது.
காரைதீவு பிரதேச விவசாயபோதனாசிரியர்
பிரிவில் விவசாயப்போதனாசிரியை திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நேற்று இக் கூட்டு விளம்பர நிகழ்வு காரைதீவில் நடைபெற்றது.
நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர் ஷமீர் அகமட், அக்கரைப்பற்று விவசாய போதனாசிரியர் ஜேஎம்.பாஷில், தொழினுட்ப உத்தியோகத்தர் ஏரி.தஸ்னீம்
ஆகியோர் விவசாயிகளின்
காலடிக்குச்சென்று தேனீ வளர்ப்பு தொடர்பில் விளக்கமளித்து விழிப்புணர்வை
ஏற்படுத்தி வருகிறது.


