நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (06) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,7000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து, எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


