(ஹஸ்பர் ஏ.எச்)
திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு வியாழக்கிழமை (06) தி/இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்கம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், திருகோணமலை இலிங்கநகர் ஸ்ரீ கோணலிங்கம் மகா வித்தியாலயத்தின் அதிபரும், கவிஞருமான திருமதி சுஜந்தினி யுவராஜா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
இச்செயலமர்வில், செய்தி எழுதுதல், செய்தியை விளங்கிக்கொள்ளல், கவிதையை விளங்கிக்கொள்ளல், சிறுகதையை விளங்கிக்கொள்ளல் ஆகிய தலைப்புக்களில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டிருந்தன.
பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி. விஜிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில், வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன், வாசல் வாசகர் வட்டத்தின் செயலாளர் மற்றும் வாசல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ச.திருச்செந்தூரன், சிறுகதை எழுத்தாளர் திருமலை மதன் ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்று தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது


