( வி.ரி.சகாதேவராஜா)
கராத்தே எஸ்கேஓ ( SKO) பயிற்சி நிலையம் ஒன்று ஆரையம்பதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கராத்தே பொறுப்பு ஆசிரியர் த.வினோசாந்தின் ஏற்பாட்டில் புதிய கிளை நவீனத்துவத்துடன் பயிற்சி உபகரணங்களையும் கொண்டு ஆரையம்பதியில் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கெளரி தினேஷ் கலந்து கொண்டு திறந்துவைத்தார்.
திறப்பு விழாவில் தலைமை பொறுப்பாசிரியர் கே.ரி. பிரகாஸ், சிறப்பு போதனா ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பட்டி வழங்குதல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .
மட்டக்களப்பினை தலைமைக் காரியாலயமாக கொண்டு இயங்கி வரும் SKO கராத்தே பயிற்சி நிலையம் பல கிளைகளை நிறுவி வருகின்றது . இதன் அடிப்படையில்
இக் கழகமானது ஆரையம்பதியில் பல மாணவர்களை பயிற்று வித்துவருவதுடன் கடந்த கால போட்டிகளிலும் பங்கு பற்றி பாடசாலை மட்ட மாகாண போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றுள்ளதோடு 30 வருடங்களாக இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


