( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக, இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர சிரேஸ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நிருவாக அமைச்சின் ஊடாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் நேற்று (04) அவர் கடமையினை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார்.
இதுவரை அம்பாறை மாவட்ட பதில் சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றி வந்த அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க செயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில் அவர் கடமையினை பொறுப்பேற்றார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளராகவும், கிழக்கு மாகாண சமூக சேவைத்திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் இறுதியாக கடமையாற்றி வந்தவராவார்.


