மஹர சிறைச்சாலை வளாகத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (1) மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பினரை நோக்கி கற்களினால் தாக்குதல் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் அங்கு தற்போது பாரிய பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


