( வாஸ் கூஞ்ஞ) 01.08.2026
கடந்த ஆடி மாதம் (2026) மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு பெருவிழா ஒருங்கிணைப்புக்கு எற்றவாறு மிக சிறப்பாக இடம்பெற்றமைக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மடு பாரிபாலகர் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு திணைக்களத் தலைவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன் இக்காலக்கட்டத்தில் பாடசாலை விடுமுறையாக இருப்பதால் இந்த ஆவணி மாத பெருவிழாவுக்கும் பெருந் தொகையான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நடைபெற இருக்கும் ஆவணி மாதப் பெருவிழாவும் சிறக்க வேண்டும் என இதற்கான முன்னாய்த்தக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
வரலாற்று பகுழ்பெற்ற வர்தத்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் வருடாந்த பெருவிழாவின் இரண்டாவது பெருவிழா எதிர்வரும் 06ந் திகிதி (06.;08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ந் திகதி (15.08) மடு அன்னையின் விழாக் கொண்டாடப்பட இருக்கின்றது.
இவ்விழாவை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.தமிழ் நேசன் அடிகளார்- மடு ஆலய பரிபாலகர் அருட்பணி எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்ற இவ்விழாவுக்கான முன்னாய்த்த கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (031.07) மாலை நடைபெற்றபோது சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளாரின் செபவழிபாட்டுடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவத்தில் இக்கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தை ஆரம்பித்த அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவக்கையில் மருதமடு ஆலய பெருவிழாக்கள் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டதிற்கு இணங்க நடைபெறுகிறது. இதன் ஆடிமாத விழாவைத் தொடர்ந்து இரண்டாவது பெருவிழா எதிர்வரும் 06ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ந் திகதி நிறைவுறுகிறது.
இதிலும் குறிப்பாக 12ந் திகதி தொடக்கம் 15ந் திகதிகள் வரை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல இலட்சம் பக்தர்கள் மடு அன்னையின் ஆசீரைப் பெறுவதற்காக வருகை தருவது வழமையானது.
ஆனால் இம்முறை இந்நாட்களில் பாடசாலை விடுமுறை காலமாக இருப்பதால் கடந்த காலத்தை விட அதிகமான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உடசவத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அனைத்து அத்தியாவசிய தேவைகளை வழங்குவது தொடர்பாக அனைத்து பங்குதாரர்கள் திணைக்களங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நாம் கலந்து கொண்டுள்ளளோம் என இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தை தொடர்ந்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நாட்டில் டெங்கு நோய் பரவலாக அச்சுறுத்தலாக இருக்கின்றது. வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகமான பக்தர்கள் இங்கு வருகை தருவதால் இங்கு இந்நோய் பரவதிருக்கும் முகமாக அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட சுகாதார அதிகாரிகளின் எற்பாடு மற்றும் மேற்பார்வையின் கீழ் விஷேட ஏற்பாடுகளாக புகையூட்டும் செய்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் இங்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்புக்கள் களவுகள் இடம்பெறாதிருக்க முப்படைகளின் உதவிகளுடன் புலணாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புடன் வஷேடமான பாதுகாப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் சிவில் உடை மற்றும் சாதார உடைகளுடன் தங்கள் கடமைகளை செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இக்காலம் எல்நிநோ அசாதாரன காலமாக இருப்பதனால் கடும் வெப்பம் நிலவுவதால் யானைகள் மற்றும் காட்டு விலங்குகள் இக்கானகத்திற்குள் அச்சுறுத்தலாக இருப்பதால் இக்கானக விலங்குகளிலிருந்து பக்தர்களை பாதுகாப்பதற்கான விஷேட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மடு பிரதேசம் ஒரு புனிதமான பிரதேசமாக இருப்பதால் மடு ஆலயப் பகுதியில் மதுபானம் விற்பதோ எடுத்துச் செல்வதோ தடைப்படுத்தப்பட்டுள்ளது. இதை உன்னிப்பாக கண்காணிக்க பொலிசார் மற்றும் மதுவரித் திணைக்களம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.
அத்துடன் நீர் விநியோகம் மின்சார விநியோகங்கள் சீராக வழங்குவதற்கும் மற்றும் உணவு அத்தியாவசியப் பொருட்களை நியாமான விலைகளுக்கு விற்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
இவற்றுடன் இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கான போக்குவரத்துக்களும் நியாயமான கட்டணத்தில் பிரயாணம் செய்வதற்குமான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மடு ஆலயப் பகுதியில் சட்டம் ஒழுங்குகளை நிலைநாட்டும் நோக்குடன் எதிர்வரும் 12ந் திகதி தொடர்க்கம் 15ந் திகதி வரை சுற்றுலா நீதிமன்றம் மடு ஆலய வளாகத்தில் இயங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத செயற்பாடுகள் நியாயமற்ற விலைகளில் பொருட்களை விற்றல் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மடு விழாவுக்கு வருகை தரும் யாவருக்கும் சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி இப்பெருவிழாவுக்கு வந்து அன்னையின் அருளைப் பெற்றுச் செல்லலாம் என இவ்வாறு அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இதன் ஒழுங்கமைப்புக்களை சரிபார்க்கும் நோக்குடன் இரண்டாவது கலந்துரையாடல் எதிர்வரும் 11ந் திகதி காலை 11 மணிக்கு மடு ஆலயதத்pல் நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (60)


