மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம

 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் தலைமையில் 31.07.2026

பழைய மாவட்ட செயலக மகா நாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது

 

இதன்போது கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் கல்வி சுகாதாரம் போக்குவரத்து விவசாயம் மீன்பிடி காட்டு யானைத் தாக்கம் போதைப் பொருள் பாவனையை தடுத்தல் கிளீனிங் சிறிலங்கா வேலை திட்டத்தின் முன்னேற்றங்கள் காலநிலை மாற்றங்கள் பிரஜா சக்தி வேலைத்திட்ட ஆய்வு தொல்பொருள் டெங்கு நோய் தாக்கம் என பலதரப்பட்ட விடயங்கள் இங்கு ஆராயப்பட்டதுடன் தீர்வுகளும் காணப்பட்டது

 

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ் அருள்ராஜ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த அபிவிருத்தி கூட்டத்திற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு- எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன் ஞானமுத்து ஸ்ரீ நேசன் வைத்தியர் ஸ்ரீநாத் மற்றும்

மாகாண அரச திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் மட்டு மா நகர சபை முதல்வர் ஆணையாளர் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.