தம்பலகாமத்தில் தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கூத்து ஆற்றுகை விழா

ஹஸ்பர் ஏ.எச்-

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் மற்றும் தம்பலகமம் பிரதேச செயலகம் இணைந்து நடத்திய கூத்து ஆற்றுகை விழா இன்று (31) தம்பலகாமம் தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கலையரங்கத்தில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி. விஜய குமார், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஐ. ஆர். ஜி நிமல் பண்டார, தம்பலகாமம் கோட்ட கல்வி அதிகாரி இரா. ராஜாசுரேஷ் தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான க. அன்பழகன், திருமதி வ. ஜேசுபரன் உட்பட தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதி்ல் தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையிலான பல்வேறு கலை கலாசார அம்சங்களும் நடனங்களும் இடம்பெற்றன.
திருகோணமலை சிறீ கோணேஸ்வரா இந்து கல்லூரி மாணவர்களால் காத்தவராயன் சிந்து நடைக்கூத்து,வெருகல் இளம்பிறைக் கழகம் புலிக்கூத்து, திருகோணமலை அன்புவழிபுரம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களின் விசேட கூத்து என கூத்து ஆற்றுகை இடம்பெற்றது.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் கலை கலாசார அம்சங்கள் ஊடாக கலைகளை வளர்க்க இது போன்ற நிகழ்வுகள் பெரிதும் பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Hasfar A Haleem BSW (Hons)