காத்தான்குடியில் சமுர்த்தி ரன்விமன வீடு கையளிக்கும் நிகழ்வு.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வு நேற்று(27) திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மெளஜுத் தலைமையில் இடம் பெற்றது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பத்து இலட்சம் நிதியுதவியுடனும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸக்காத் திட்டத்தில் ஐந்து இலட்சம்
நிதிப் பங்களிப்பும் பயனாளி மற்றும் சில தனவந்தர்களின் ஐந்து இலட்சம் நிதிப் பங்களிப்புடனும் இருபது லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடானது 165 ஏ காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் ஏ.ஆர்.சாமிலா எனும் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஹன்சுல் சிஹானா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப்.ஆர்.பரீட், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பதில் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் உட்பட அதன் உறுப்பினர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பத்தாயிரம் பெறுமதியான உலர் உணவு பொதிகளும் அதிதிகளால் பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.