நெல்லிக் கண்டத்தில் விவசாய வீதி திறந்து வைப்பு

( வி.ரி சகாதேவராஜா)
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை நெல்லிக் கண்டத்தில் விவசாயிகள் பாவனைக்காக விவசாய வீதி திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது .

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஎல்எம். அஸ்மி பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியை திறந்து வைத்தார் .

கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்எஸ்.றினோஸ், அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பி.திஸாநாயக்க, உதவி விவசாய பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள் மேலும் விவசாய பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.