பெர்லின் CSD பேரணியில் வாகனத் தாக்குதல்

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற Christopher Street Day (CSD) நிகழ்வின்போது, வெள்ளை நிற வாகனம் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் வேகமாகப் புகுந்தது. இதில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்தனர். தற்போது காயமடைந்த எவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து CSD நிகழ்வு உடனடியாக நிறுத்தப்பட்டது. வாகனத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலர் பொலிஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இதில் தொடர்புபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுகின்றன.

இது இஸ்லாமிய தீவிரவாத நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஜெர்மனியின் மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைப் பொறுப்பேற்றுள்ளது.