தொல்லியல் தினைக்களம், பௌத்த அடையாளங்களை காப்பது போன்று இந்து அடையாளங்களையும் காக்க வேண்டும்

கன்னியாவில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்று இந்து மக்களால் இராவணன் தனது பிதிர் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அதனை தோற்றுவித்தான் என்பது புராண ஐதீகம். இதனால் மிகுந்த பக்தியுடன் இந்துக்கள் புனித நீராடி வருவது எல்லோரும் அறிந்தது. இந்த வகையில் கன்னியாவில் தொல்லியல் திணைக்களத்தின் பௌத்த மத விகாரைக்கான புதிய கட்டுமான பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது .இதற்கு இந்துக்கள் எதிர்ப்பு இல்லை ஆனால் அங்கு இருந்த விநாயகர் ஆலயம் ,சிவன் ஆலயம் ,சிவனடியார் மடம் என்பன இல்லாமல் ஆக்கப்பட்டது இந்துக்களுக்கு மன கவலையை ஏற்படுத்தியது .எனவே பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டியது போல தொல்லியல் தினைக்களம் அங்கு இருந்த ஆலயங்களை அமைப்பாதற்கும் முன்வருவார்களேயானால் நிச்சயமாக அணைத்து இந்து மக்களாலும் வரவேற்கப்படும் .ஜனாதிபதி அனுர குமார திசைநாயக்க தேசிய நல்லிணகத்திற்கும் அணைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற அவரது ஆணித்தனமான கருத்தில் உறுதியாக இருக்கிறர். எனவே தொல்லியல் தினைக்களம் பௌத்த அடையாள சின்னங்களை காப்பது போல் இந்து அடையாள சின்னங்களையும் காப்பாதற்கு முன்வந்து ஜனாதிபதியின் தேசிய நல்லிணகத்திற்கும் அணைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர்கள் மதிப்பாளித்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசாந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

Kajaana chandrabose
journalist (Dip.journalism )