மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொருட்களை வழங்கிய பிரதேச சபை.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு பிரதேச சபையினால் பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் வாழ்வாதார மேம்பாடு கருதி சிறு தொழில் மேற்கொள்ளத்தக்க வகையில் இயந்திரங்களும் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேசத்தில் காணப்படுகின்ற பொருளாதார ரீதியாக பின்னடைவில் காணப்படுகின்ற மக்களுக்கும் விதவைகள் மற்றும் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சுய தொழிலை மேற்கொள்ள முடியாது பிரதேசத்தில் காணப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு தேங்காய் துருவும் இயந்திரம் இடியப்பசட்டி மற்றும் மா மற்றும் மிளகாய் அரைக்கும் இயந்திரம் என்பன தெரிவு செய்யப்பட்ட 375 குடும்பங்களுக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் உறுப்பினர்கள் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்வாதார பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது